பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் பிரேம்ஜி - குவியும் வாழ்த்து
நடிகர் பிரேம்ஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.;
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி . இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், டைரக்டர் வெங்கட் பிரபுவின் சகோதரனுமான இவர் 'சென்னை 600028 - 1 மற்றும் 2, கோவா, சரோஜா, சந்தோஷ் சுப்ரமணியம், மங்காத்தா, மாநாடு'' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே, நடிகர் பிரேம்ஜிக்கும் அவரது காதலி இந்துவுக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நடிகர் பிரேம்ஜியின் மனைவி இந்துவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் பிரேம்ஜிக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.