பாடகி கெனிசாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரவி மோகன்
சமீகாலமாக பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம்.;
சென்னை,
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிசா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீகாலமாக பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம். இவர்களின் விவாகரத்து பிரச்சினையில் முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில், நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிசா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.