வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கையால் பிடித்த நடிகர் சோனு சூட்
பிரபல இந்தி நடிகர் சோனு சூட், தான் வசிக்கும் வீட்டு வளாகத்திற்குள் வந்த ஒரு பாம்பை வெறும் கைகளால் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.;
பிரபல இந்தி நடிகர் சோனு சூட். இவர் தமிழ் சினிமா படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் ஆவார். தமிழில் 'ஒஸ்தி', 'தேவி', 'மதகஜராஜா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவர் கொரோனா காலத்தில் இருந்தே மக்களுக்கு உதவிகள் செய்ய தொடங்கிய நிலையில், அவரிடம் உதவி கேட்டு தினமும் வீட்டின் முன் ஒரு பெரிய கூட்டம் நிற்கிறது. அவர்களுக்கு முடிந்த உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.
பிரபல இந்தி நடிகர் சோனு சூட், தான் வசிக்கும் வீட்டு வளாகத்திற்குள் வந்த ஒரு பாம்பை வெறும் கைகளால் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவர், அந்த பாம்பு விஷத்தன்மை வாய்த்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாம்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் தான்செய்ததை பின்பற்ற வேண்டாம் என்றும் எச்சரித்தார்.