நடிகை பரினீதி சோப்ராவுக்கு ஆண் குழந்தை...குவியும் வாழ்த்து
நடிகை பரினீதி சோப்ரா 2023-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சதாவை திருமணம் செய்து கொண்டார்.;
சென்னை,
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கு குழந்தை பிறந்துள்ளது. தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை பரினீதி சோப்ரா 2023-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சதாவை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை பரினீதி கடந்த ஆண்டு , தில்ஜித் தோசன்ஜுடன் அமர் சிங் சங்கிலா படத்தில் நடித்தார். இந்த ஆண்டு, அவர் ஒரு படத்திலும் ஒரு வெப் தொடரிலும் மட்டுமே நடித்துள்ளார்.