புற்றுநோய் பாதிப்பு: இந்தி நடிகை உயிரிழப்பு

மராட்டியத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகை பிரியா மராத்தே;

Update:2025-09-01 01:23 IST

மும்பை,

மராட்டியத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகை பிரியா மராத்தே (வயது 38). இவர் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே, பிரியா மராத்தேவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த சில மாதங்களாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரியா மராத்தே நேற்று உயிரிழந்தார். மும்பை மிரா சாலையில் உள்ள தனது வீட்டில் பிரியா மராத்தே உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்