தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகையின் மகள்...ஹீரோ யார்?
பாலிவுட் திரையுலகில் ஒரு காலத்தில் நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் ரவீனா தாண்டன்;
சென்னை,
ஒரு காலத்தில் பாலிவுட்டில் நட்சத்திர கதாநாயகியாக இருந்த ரவீனா தாண்டன், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்போது இளம் ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்.
தமிழில் இவர் 'சாது', 'ஆளவந்தான்' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரது மகள் ராஷா ததானி. இவர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி வெளியான 'ஆசாத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், அதில் இடம் பெற்ற "உயி அம்மா" பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், ராஷா ததானி, தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மகேஷ் பாபுவின் சகோதரர் ரமேஷ் பாபுவின் மகன் ஜெயகிருஷ்ணா விரைவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அப்படத்தில் ஜெயகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ராஷா ததானி நடிப்பதாக கூறப்படுகிறது.