திருப்பதி கோவிலில் சமந்தா, கயாடு லோஹர் சாமி தரிசனம்

திருப்பதி கோவிலில் நடிகைகள் சமந்தா மற்றும் கயாடு லோஹருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.;

Update:2025-04-19 18:13 IST

திருப்பதி,

'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் விஜய்யுடன் இணைந்து கத்தி தெறி, மெர்சல் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். கடைசியாக தமிழ் சினிமாவில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்திருந்தார்.

'டிராகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் அதிகம் தேடும் நடிகையாக மாறிவிட்டார். தற்போது ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் 'இதயம் முரளி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Full View

இந்நிலையில், நடிகைகள் சமந்தா மற்றும் கயாடு லோஹர் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த அவர்களை, அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவிலுக்கு வெளியே வந்த நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்