டிடிஎப் வாசனுடன் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த நடிகை
டிடிஎப் வாசன் நடித்துள்ள ஐபிஎல் படம் வருகிற 28-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.;
சென்னை,
கருணாநிதி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஐபிஎல்’ (இண்டியன் பெனல் லாவ்). இப்படத்தின் கதாநாயகனாக டி.டி.எப்.வாசன் நடித்துள்ளார். மேலும் கிஷோர், அபிராமி, குஷிதா, சிங்கம்புலி, ஹரீஸ்பெரடி, ஆடுகளம் நரேன், ஜான்விஜய், போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்து உள்ளனர். அஸ்வின் விநாயக மூர்த்தி இசை அமைத்துள்ளார். வருகிற 28-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.
இதையொட்டி படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கதாநாயகன் டி.டி.எப். வாசன் பேசியதாவது:- "இது என்னுடைய முதல் படம். நான் கூச்ச சுபாவம் உள்ள பையன். சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். குஷிதாவிடம் முத்தக் காட்சிகளில் நடிப்பதற்கு நீங்கள் ‘நெர்வசாக’ இருக்கிறீர்களா? என கேட்டேன். ஆம்...! தயாராகதான் இருக்கிறேன். ஆனால் ‘கிஸ்’ எல்லாம் ‘நோ’ என்றார். அபிராமி என்ன அழகு...? ரொம்ப அழகு. ரொம்ப ஸ்வீட் (இவ்வாறு வாசன் பேசும் போது மேடையில் இருந்த அபிராமி பறக்கும் முத்தம் கொடுத்தார்.) இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது. எல்லோரும் குடும்பத்தோடு தியேட்டருக்கு போய் பாருங்கள்." இவ்வாறு அவர் கூறினார்.
அபிராமி பேசும் போது, "படத்தில் சஸ்பென்ஸ், காதல் மற்றும் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் உள்ளது. டி.டி.எப். வாசன் ரொம்ப ஸ்வீட்டானவர். அவருக்கு சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. அப்படியே இருங்கள். மாறாதீர்கள்." இவ்வாறு அவர் பேசினார்.