மீண்டும் சினிமாவில் களமிறங்கும் அமலாபால்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகை அமலாபால் புதிய கதைகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-11-12 08:14 IST

தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்த அமலாபாலுக்கும், டைரக்டர் விஜய்க்கும் 2014-ம் ஆண்டில் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. அதன்பிறகு தொழில் அதிபர் ஜெகத் தேசாய் என்பவரை, அமலாபால் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இளய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. திருமணம், குழந்தைகள் என்று ஆனதற்கு பிறகு படங்களில் அவர் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது அமலாபால் மீண்டும் நடிக்க ஆர்வமாகி வருவதாக கூறப்படுகிறது. தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். மேலும் கேரள சிகிச்சைகளை மேற்கொண்டு மேனியையும் பளபளவென மாற்றியும் இருக்கிறார். புதிய கதைகளையும் கேட்டு வருவதாக பேசப்படுகிறது.

இதனால் புதிய பட அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்