பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்மேந்திரா உடல்நிலை தேறியதால் டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-11-12 09:05 IST

மும்பை,

பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியவர் நடிகர் தர்மேந்திரா (வயது 89). இவர் கடந்த 1960ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் என்பதை கடந்து அரசியல்வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவரது உடல்நிலை மோசமானதால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அதனை மறுத்து அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டனர். அதில், அவர் நலமுடன் இருப்பதாகவும், தேவையில்லாத பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்மேந்திரா உடல்நிலை தேறியதால் டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்