பகத் பாசிலின் முதல் தெலுங்கு படம்...ஒன்றரை வருடத்திற்கு பிறகு தொடங்கிய படப்பிடிப்பு

பகத் பாசில் தற்போது தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாக போகிறார்.;

Update:2025-10-19 16:49 IST

சென்னை,

புஷ்பா படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பகத் பாசில் தற்போது தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாக போகிறார். அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது.

'டோண்ட் டிரபுள் தி டிரபுள்' என்ற இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டநிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு இப்போதுதான் தொடங்கியுள்ளதால், மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இந்தப் படத்தை இயக்குனர் ஷஷாங்க் யெலெட்டி இயக்குகிறார். இதன் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். கால பைரவா இசையமைக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்