திரையரங்குகளில் தோல்வி...ஓடிடியில் வரவேற்பை பெறும் பாக்யஸ்ரீ போர்ஸ் படம்
இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட போதிலும், திரையரங்குகளில் சிறப்பாக ஓடவில்லை.;
சென்னை,
தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘ஆந்திரா கிங் தாலுகா’. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி புகழ் மகேஷ் பாபு இந்த படத்தை இயக்கியுள்ளார். உபேந்திரா மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட போதிலும், இந்தப் படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடவில்லை. ஆனால் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஆந்திரா கிங் தாலுகா டிரெண்டிங்கில் உள்ளது. இந்தப் படம் இப்போது நெட்பிளிக்ஸ் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
இதில் ராவ் ரமேஷ், ராகுல் ராமகிருஷ்ணா, முரளி சர்மா, சத்யா, மற்றும் துளசி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்தனர்.