6 ஆண்டுக்குப்பின் படம் இயக்க வரும் ’சூப்பர் டீலக்ஸ்’ இயக்குனர்

’சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை விஜய் சேதுபதி வென்றார்.;

Update:2025-12-31 10:42 IST

சென்னை,

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, 6 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தை எடுத்த அவர், தனது அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டதாக தெரிகிறது.

இதிலும், விஜய் சேதுபதியே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் , படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரியில் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினையும் வென்றார் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா எந்தவொரு படத்தினையும் இயக்காமல் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்