’டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா...கவனம் ஈர்க்கும் பர்ஸ்ட் லுக்

‘டாக்ஸிக்’ படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகிறது.;

Update:2025-12-31 11:01 IST

சென்னை,

‘டாக்ஸிக்’ படத்தில் 'கங்கா' என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார் .

நடிகர் யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்திலிருந்து, கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. இந்நிலையில், நயன்தராவின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்