தனது பெயரில் மோசடி முயற்சி - எச்சரித்த 'புரூஸ் லீ' பட நடிகை
தனது பெயர் தவறாக பயன்படுத்தப்படுவதாக பிரபல நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.;
சென்னை,
தனது பெயரை பயன்படுத்தி மோசடி முயற்சி நடைபெறுவதாக 'புரூஸ் லீ' பட நடிகை கிரித்தி கர்பண்டா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழில் ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ் லீ' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கிரித்தி கர்பண்டா. இவரது பெயரை பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் கணக்கு துவங்கிய மர்ம நபர், நடிகை கிரித்தி கர்பண்டாவுக்கு தெரிந்தவர்களை தொடர்புகொண்டு ஏமாற்ற முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த ஸ்கிரீன்சாட்டைப் வெளியிட்ட நடிகை கிரித்தி கர்பண்டா, எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.