அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இயக்குநர்கள்

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ரேஸிங் ஆவணப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.;

Update:2026-01-04 16:29 IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார்பந்தய வீரராகவும் நடிகர் அஜித் திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

நடிகர் அஜித்குமாரின் ரேசிங் மீதான ஆர்வம் மற்றும் பந்தயத்தில் அவர் செய்த சாதனைகளை குறித்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் தயாரித்து வருகிறார்.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 'RACING ISN'T ACTING' ஆவணப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன், விஷ்ணுவர்தன் ஆகியோருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மீண்டும் அஜித்குமாரின் 64-வது புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்