'இது உங்க வீடு இல்ல...வெளியே போங்க'...ஆலியா பட் கோபம் - வீடியோ வைரல்
ஆலியா பட் புகைப்படக்கலைஞர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தினார்;
மும்பை,
பாலிவுட் நடிகை ஆலியா பட் தற்போது ''ஆல்பா'' படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ''ஜிக்ரா'' திரைப்படம் ஏமாற்றத்தைக்கொடுத்தநிலையில், இந்த படத்தின் மீது ஆலியா பட்டின் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஷிவ் ராவல் இயக்கும் இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது. தற்போது படப்பிடிப்பில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், புகைப்படக்கலைஞர்கள் மீது ஆலியா பட் கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
டென்னிஸ் விளையாட வந்த ஆலியா, காரில் இருந்து இறங்கியவுடன் புகைப்படக் கலைஞர்களால் சூழப்பட்டார். அவர்கள் அவரை புகைப்படம் எடுக்க பின் தொடர்ந்து சென்றனர். ஆலியாவுடன் கட்டிடத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால், ஆலியா பட் அவர்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
உள்ளே வராதீர்கள் ..தயவுசெய்து வெளியே செல்லுங்கள். இது உங்கள் வீடு அல்ல என்று கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், இது போன்ற புகைப்படங்களுக்காக பிரபலங்களைத் துரத்திச் சென்று துன்புறுத்துவது சரியல்ல என்று சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.