அல்லு அர்ஜுனின் புதிய பட அப்டேட்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.;

Update:2025-03-30 17:57 IST

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா தி ரைஸ் மற்றும் புஷ்பா தி ரூல் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார். புஷ்பா தி ரைஸ் படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.

இப்போது அனைவரது பார்வையும் அவரது அடுத்த படத்தின் மீது உள்ளது. அதன்படி, அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் அட்லீயின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, அட்லீயின் இயக்கத்தில் வெளியான 'மெர்சல், பிகில், ஜவான்' ஆகிய படங்களை போன்றே அல்லு அர்ஜுன் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார்.  இந்த புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள், அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான வருகிற ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்