அல்லு அர்ஜுன் - அட்லீ படத்தில் இணையும் அனன்யா பாண்டே?

இப்படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;

Update:2025-04-29 20:31 IST

சென்னை,

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்க உள்ளார்.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இப்படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாகூர் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 3-வது கதாநாயகியாக அனன்யா பாண்டே இனைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்