விஷாலுடன் மீண்டும் இணைந்த அஞ்சலி

நடிகர் விஷாலின் 35வது படத்தில் நடிகை அஞ்சலி இணைந்துள்ளார்;

Update:2025-08-22 21:30 IST

சென்னை,

விஷால், 'ஈட்டி' பட இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகை அஞ்சலி இணைந்துள்ளார். 'மதகஜராஜா' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு விஷாலுடன் நடிகை அஞ்சலி இணைந்திருக்கிறார்.

இதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் நிலையில், அஞ்சலியின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்