வீட்டின் மொட்டை மாடியில் சமந்தாவின் படத்தை வரைந்த ஓவியர் - அசந்துபோன கீர்த்தி சுரேஷ்

ஓவியர் ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் சமந்தாவின் படத்தை வரைந்திருக்கிறார்.;

Update:2025-08-09 07:16 IST

சென்னை,

நடிகை சமந்தாவின்  உருவப் படத்தை ஓவியர் ஒருவர் தன்னுடைய  வீட்டு மொட்டை மாடியில் வரைந்து அசத்தியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ்கள் குவித்து வருகிறது.

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா. இவர் தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் ரக்த் பிரமாண்ட்: தி பிளடி கிங்டம் என்கிற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஓவியர் ஒருவர் வீட்டின் மொட்டை மாடியில் சமந்தாவின் படத்தை வரைந்திருக்கும் வீடியோவை பார்த்து அசந்துபோன கீர்த்தி சுரேஷ் ஓவியரின் திறமையை பாராட்டி ''வாவ்'' என்று கமென்ட் செய்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்