’அதை செய்ய வற்புறுத்தினார்கள்’ - ஆயிஷா கான்
ஆயிஷா கான் "கேங்க்ஸ் ஆப் கோதாவரி" படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார்.;
சென்னை,
இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஆயிஷா கான், திரைப்படத் துறையில் நடிகைகள் எதிர்கொள்ளும் அழுத்தங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
அழகுக்காக அறுவை சிகிச்சை செய்ய தனக்கு பலர் அழுத்தம் தந்ததாகவும், உடல் எடையைக் குறைத்து மெலிதாகத் தோன்றச் சொன்னதாகவும் அவர் கூறினார்.
ஆனால் அதை எதையும் தான் செய்யவில்லை எனவும் பகிர்ந்து கொண்டார். இந்த முடிவு தனக்கு சாதகமாக அமைந்ததாகவும், கவர்ச்சி பாடல்கள் மற்றும் சிறப்புப் பாடல்களுக்கு அது உதவியதாகவும் ஆயிஷா கூறினார்.
ஆயிஷா கான் "கேங்க்ஸ் ஆப் கோதாவரி" உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். சமீபத்தில் துரந்தர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.