மலையாள சினிமாவில் வரலாறு படைத்த சாய் அபயங்கர்
ஷான் நிகாம் நடித்துள்ள ''பல்டி'' படத்தின் மூலம் மலையாளத்தில் இசையமைப்பாளராக சாய் அறிமுகமாகி உள்ளார்;
சென்னை,
மலையாள சினிமாவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஒரு மாபெரும் வரலாறு படைத்துள்ளார்.
''பல்டி'' படத்தில் இசையமைத்ததற்காக சாய் அபயங்கருக்கு ரூ.2 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இது மலையாளத் துறையில் ஒரு இசையமைப்பாளருக்கு வழங்கப்பட்ட அதிக சம்பளம் ஆகும். இதனை சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் உறுதிபடுத்தினார்.
சாய் அபயங்கர், ''கட்சி சேரா'', ''ஆச கூட'' போன்ற பாடல்கள் மூலம் புகழ் பெற்றார். இந்த பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
''கருப்பு'', ‘டியூட்’, ‘பல்டி’, ‘எஸ்டிஆர் 49’, பென்ஸ், சிவகார்த்திகேயன் - ’குட் நைட்’ விநாயக் இணையும் படம் என அடுத்தடுத்த வாய்ப்புகள் சாய் அபயங்கருக்கு குவிந்தன. பிரமாண்ட பட்ஜெட்டில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்துக்கும் சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஷான் நிகாம் நடித்துள்ள ''பல்டி'' படத்தின் மூலம் சாய் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.