2025-க்கு நன்றி சொன்ன நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

இந்த ஆண்டு பாக்யஸ்ரீ போர்ஸின் மூன்று படங்கள் வெளியாகின.;

Update:2025-12-28 17:50 IST

சென்னை,

பாக்யஸ்ரீ போர்ஸுக்கு 2025 ஆம் ஆண்டு மேடு பள்ளம் நிறைந்த ஆண்டாக அமைந்தது. 2024 ஆம் ஆண்டில் மிஸ்டர் பச்சன் மூலம் தெலுங்கில் அறிமுகமானாலும், 2025 ஆம் ஆண்டில் பல படங்களில் நடித்து, தென்னிந்திய சினிமாவில் மிகவும் பரபரப்பான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். இந்த ஆண்டு அவரின் மூன்று படங்கள் வெளியாகின. கிங்டம், காந்தா மற்றும் ஆந்திரா கிங் தாலுகா .

இந்தப் படங்கள் எதுவும் பெரிய அளவில் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறவில்லை என்றாலும், பாக்யஸ்ரீ தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். 2026-ம் ஆண்டில் மேலும் பல படங்களில் அவர் நடிக்க உள்ளநிலையில், 2025-ம் ஆண்டுக்கு நன்றி கூறியுள்ளார்.

பாக்யஸ்ரீ தனது பதிவில், 2025 அன்பும் கற்றலும் நிறைந்த ஆண்டாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். “2025-க்கு நன்றி. அன்பு, சிரிப்பு மற்றும் கற்றல்கள் நிறைந்த ஒரு வருடம்! இதற்கெல்லாம் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது அகில் அக்கினேனிக்கு ஜோடியாக " லெனின் " படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இது 2026 கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்