பாடகராக அறிமுகமான நடிகர் நவீன் பொலிஷெட்டி
இப்படத்தில் நவீன் பொலிஷெட்டிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிரார்.;
சென்னை,
நடிகர் நவீன் பொலிஷெட்டி தனது “அனகனக ஓக ராஜு” படத்திலிருந்து சமீபத்தில் வெளியான “பீமாவரம் பல்மா” பாடலின் மூலம் பாடகராக அறிமுகமாகி இருக்கிறார். சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுத, நவீன் பொலிஷெட்டியுடன் நுடனா மோகனும் பாடியுள்ளார்.
நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரித்துள்ள படம் “அனகனக ஓக ராஜு”. இப்படத்தில் நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மாரி இயக்கி இருக்கும் இப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார்.
மறுபுறம், மீனாட்சி சவுத்ரி, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ’விருஷகர்மா’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் வர்மா இயக்குகிறார்.