சிரஞ்சீவி, நயன்தாரா படப்பிடிப்பு வீடியோ கசிவு - படக்குழு எச்சரிக்கை

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.;

Update:2025-07-19 16:17 IST

சென்னை,

அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் கசிந்துள்ளநிலையில், படக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் பதிவில், படப்பிடிப்பு தளங்களிலிருந்து கசிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இவ்வாறு பதிவு செய்தல் மற்றும் அதை பரப்புதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படம் மட்டுமில்லாமல், சிரஞ்சீவி விஸ்வம்பரா படத்திலும் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மறுபுறம், நயன்தாரா ''டியர் ஸ்டூடண்ட்'' மற்றும் ''டாக்ஸிக்'' படங்களில் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்