“கூலி” என் இதயத்துக்கு நெருக்கமான திரைப்படம் - சவுபின் சாஹிர்

‘கூலி’ திரைப்படத்தின் அனுபவம் குறித்து நடிகர் சௌபின் சாகிர் பதிவிட்டுள்ளார்.;

Update:2025-08-24 17:43 IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’. இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நாகர்ஜூனா, சவுபின் சாஹிர், ரச்சிதா ராம் ஆகியோரின் கதாபாத்திரங்கள் பேசப்பட்டன.

இந்த நிலையில், ரஜினிகாந்த், அமீர்கான், உபேந்திரா, லோகேஷ் கனகராஜ் எனப் பிரபலங்கள் பலருடனும் ‘கூலி’ படப்பிடிப்புத் தளத்தில் சவுபின் சாஹிர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தன்னுடைய சமூக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “ சில சமயங்களில் சினிமா கனவுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. உங்கள் அன்புக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி. கூலி படமும் தயாள் கதாபாத்திரமும் எப்போதும் எனக்கு நெருக்கமாக இருக்கும். அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார் சவுபின் சாஹிர்.

Tags:    

மேலும் செய்திகள்