இந்தி படத்தின் புரோமோசனுக்காக மும்பை பறந்த தனுஷ்

தனுஷ் - ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் வரும் 28-ம்தேதி வெளியாக இருக்கிறது.;

Update:2025-11-11 19:11 IST

போர் தொழில் பட இயக்குனர் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் தனுஷ் நடித்துத்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘டி54’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தேரே இஷ்க் மே’. ஆனந்த் எல் ராய், தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களான 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' ஆகிய படங்களை இயக்கியவர். முன்னணி பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 28-ம்தேதி வெளியாக இருக்கிறது.

Advertising
Advertising

இந்த நிலையில் தனது 54ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் புரோமோசனுக்காக மும்பை சென்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்