பிரபாஸுக்கு நன்றி சொன்ன ’பவுஜி’ பட கதாநாயகி

இமான்வியின் சமீபத்திய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.;

Update:2025-11-11 17:05 IST

சென்னை,

பிரபாஸ் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணைந்து ஸ்பிரிட் படத்திலும், ஹனு ராகவபுடி இயக்கத்தில் பவுஜி படத்திலும் நடித்து வருகிறார். பவுஜி படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இமான்வியின் சமீபத்திய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபாஸ் தனக்காக ஒரு சுவையான உணவைக் கொண்டு வந்ததாக அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும், நீங்கள் சமைத்த உணவை சாப்பிட்ட பிறகு என் வயிறும் இதயமும் அன்பால் நிறைந்துள்ளதாகவும், அதற்கு நன்றி என்றும் இமான்வி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பவுஜி படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, ஜெய்பிரதா மற்றும் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், விஷால் சந்திரசேகர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்