தனுஷ், கிரித்தி சனோன் படத்தின் அடுத்த படப்பிடிப்பு தளம் இதுவா ? - இயக்குனர் பகிர்ந்த புகைப்படம் வைரல்
தனுஷ் தற்போது நடித்து வரும் இந்தி படம் 'தேரே இஷ்க் மெய்ன்'.;
சென்னை,
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து வரும் இந்தி படம் 'தேரே இஷ்க் மெய்ன்'. ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படமானது வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
தனுஷின் முந்தைய இந்தி படங்களான 'ராஞ்சனா, அத்ராங்கி ரே' படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இப்படத்தையும் இயக்கி வருகிறார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றநிலையில், 2-ம் கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்றது. இந்நிலையில், படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி இருக்கிறது.
அதன்படி இயக்குனர் ஆனந்த் எல் ராய், லேவிலிருந்து ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகும்நிலையில், விரைவில் இங்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.