8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சர்ஜா, ரச்சிதா ராம்?

இந்த படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை;

Update:2025-11-16 17:07 IST

சென்னை,

துருவா சர்ஜாவின் ‘கேடி’ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கும்நிலையில், அவர் தனது அடுத்த படத்திற்கான பணிகளை வேகமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. இயக்குனர் ராஜ்குரு பி உடன் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் கதாநாயகி குறித்து நிறைய வதந்திகள் எழுந்துள்ள நிலையில், ரச்சிதா ராம் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாகும் எனில் பர்ஜாரி (2017) படத்திற்குப் பிறகு துருவா சர்ஜா, ரசிதா ராம் இணையும் படமாக இது இருக்கும் .

இந்த படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், முன் தயாரிப்பு இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்