மருதமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் சந்தானம்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.;
சென்னை,
மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்தானம் கடைசியாக இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக சந்தானம் சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 படத்திலும் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.