ரஜினி கேங் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படத்தில் திவிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.;

Update:2025-11-16 15:49 IST

சென்னை,

‘பிஸ்தா’ திரைப்படம், ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம், ‘ரஜினி கேங்’.

ரஜினி கிஷன் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திவிகா நடித்துள்ளார். மேலும், முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்