’டாக்ஸிக்’ படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதும் ’துரந்தர் 2’

2-ம் பாகத்திற்கு "துரந்தர்: ரிவென்ஞ்" என்று பெயரிடப்பட்டுள்ளது.;

Update:2025-12-06 16:09 IST

சென்னை,

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம் துரந்தர். அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ. 27 கோடி வசூலித்திருக்கிறது.

மூன்று மணி நேரம் முப்பத்து நான்கு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் அதன் இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புடன் முடிகிறது. அதன்படி, 2-ம் பாகத்திற்கு "துரந்தர்: ரிவென்ஞ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது அடுத்தாண்டு மார்ச் 19 அன்று வெளியாகிறது.

இதன் மூலம் யாஷின் டாக்ஸிக் படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் இப்படம் மோதுகிறது. ஆதித்யா தார் இயக்கிய இந்தப் படத்தில் சஞ்சய் தத், அக்‌ஷய் கன்னா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்