''மாரீசன்'' படத்திற்கு இயக்குனர் சங்கர் கொடுத்த ரிவ்யூ

வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான படம் 'மாரீசன்';

Update:2025-08-11 14:03 IST

சென்னை,

வடிவேலு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரீசன் படத்தை பார்த்த இயக்குனர் சங்கர் ரிவ்யூ கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

''வடிவேலு திரையில் தோன்றிய விதம், படத்திற்கு ஆழத்தையும், பலத்தையும் சேர்த்துள்ளது. அவர் உடைந்த அந்த தருணத்தில்... ஆஹா... என்ன ஒரு அற்புதமான நடிகர் என்பதை காட்டிவிட்டார். பகத் பாசில் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அருமையான படத்தை கொடுத்த இயக்குனர் சுதீஷ் சங்கர் மற்றும் படக்குழுவுக்கு பாராட்டுகள்" என்று தெரிவித்திருக்கிறார்.

வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான படம் 'மாரீசன்' . இந்த படத்தை மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கி இருக்கிறார். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்