ஜி.வி.பிரகாஷூக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குனர் சுதா கொங்கரா

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாளில் ‘சூரரைப் போற்று’ பாடல் ரெகார்டிங் வீடியோ வெளியிட்டு இயக்குனர் சுதா கொங்கரா வாழ்த்தியுள்ளார்.;

Update:2025-06-14 11:17 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'கிங்ஸ்டன்' படம் வெளியானது. கமல் பிரகாஷ் எழுதி இயக்கிய இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து 'இடிமுழக்கம்' என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு 'இம்மோர்டல்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா 'சூரரைப் போற்று' படத்தின் 'மண்ணு உருண்டை மேல' பாடல் ரெகார்டிங் வீடியோவை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பராசக்தி'. இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, லீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்