ஒரு காலத்தில் ஸ்ரீதேவிக்கு போட்டி...பின் 22 வயதில் சினிமாவில் இருந்து விலகினார் - யார் அந்த நடிகை?

1981-ம் ஆண்டு வெளியான ''லவ் ஸ்டோரி'' திரைப்படத்தின் மூலம் ஒரே இரவில் பிரபலமானார்;

Update:2025-08-30 19:30 IST

சென்னை,

பாலிவுட் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். 1981-ம் ஆண்டு வெளியான ''லவ் ஸ்டோரி'' திரைப்படத்தின் மூலம் ஒரே இரவில் பிரபலமானார். ராகுல் ரவைல் இயக்கிய இந்தப் படத்தில் ராஜேந்திர குமாரின் மகன் குமார் கவுரவ் பண்டிட் கதாநாயகனாக விஜய்தா பண்டிட் கதாநாயகியாக நடித்தனர்.

இந்தப் படம் அப்போது பிளாக்பஸ்டர் ஹிட்டானது. விஜய்தா பண்டிட் தனது முதல் படத்திலேயே துறையில் முன்னணி கதாநாயகியாக அங்கிகாரம் பெற்றார். 80களில் பல சூப்பர் ஹிட்களைப் பெற்று நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் போன்ற நட்சத்திர கதாநாயகிகளுக்கு கடுமையான போட்டியை அளித்தார்.

இருப்பினும், அவர் ஒரு சில படங்களில் நடித்தபின் திடீரென்று திரைத்துறையை விட்டு வெளியேறினார். லவ் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்தாவும் கவுரவும் காதலித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தனது மகன் கெரியரின் தொடக்கத்திலேயே காதலிப்பதை கவுரவின் தந்தை ராஜேந்திர குமார் விரும்பவில்லை. அதன் பிறகு, விஜய்தாவுக்கு வாய்ப்புகள் படிப்படியாகக் குறைந்தன. அவர் நடித்த அனைத்து படங்களும் தோல்விகளாக மாறின.

1985-ம் ஆண்டு மொஹபத் திரைப்படம் மூலம் அவர் மீண்டும் திரையுலகிற்கு வந்தார். ஆனால் அதுவும் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது. இதன் காரணமாக, அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

1986 ஆம் ஆண்டு, அவர் திரைப்பட இயக்குனர் சமீர் மல்கானை மணந்தார். ஆனால் அவர்களின் உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதன் பிறகு1990-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவஸ்தவாவை மணந்து 22 வயதில் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார்.

Tags:    

மேலும் செய்திகள்