ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ரொனால்டோ

‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் கடைசி பாகத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நடிக்கவுள்ளார்.;

Update:2025-12-20 14:16 IST

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஹாலிவுட் தொடர் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’. கடந்த 2001-ல் வெளியான இந்த தொடரின் முதல் பாகத்தின் வெற்றியையடுத்து பல பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ 7-ல் பால் வாக்கர்,கோடி வாக்கர், நதாலி இம்மானுவேல், ஜேசன் ஸ்டாதம், வின் டீசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஹாலிவுட் திரைப்படமான ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் கடைசி பாகத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பாஸ்ட் அன்ட் பியூரியஸ்’ படங்களின் கடைசிப் பாகமான ‘பாஸ்ட் எக்ஸ்: 2’ படத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோவும் இணைந்துள்ளதாக படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். ரொனால்டோ படப்பிடிப்புத் தளத்தில் இருப்பது போன்ற படத்தை பகிர்ந்து நடிகர் கிப்சன் வரவேற்றுள்ளார்.

2027 ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தில் ரொனால்டோவும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில், ரொனால்டோவுக்காகவே ஒரு பாத்திரம் எழுதப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘பாஸ்ட் அன்ட் பியூரியஸ்’ படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், ‘பாஸ்ட் எக்ஸ்: 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்திலேயே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘பாஸ்ட் அன்ட் பியூரியஸ்’, ‘எப் 1’ போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் போவேன் என்று நடிகர் அஜித்குமார் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்