ரச்சிதா மகாலட்சுமியின் ஹாரர் படம்.. பர்ஸ்ட் லுக் வெளியானது!

இந்த படத்தை இயக்குனர் எம்​.எஸ்​.மூர்த்தி இயக்கியுள்ளார்.;

Update:2025-12-20 11:06 IST

சென்னை,

நடிகை ரச்சிதா மகாலட்சுமி 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். இவர் 2015 ம் ஆண்டு வெளியான உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு. கன்னட படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் 'பயர், எக்ஸ்ட்ரீம்' ஆகிய படங்கள் வெளியாகின. இந்த படங்களில் இவரது நடிப்பில் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து இவர் எம்​.எஸ்​.மூர்த்தி இயக்கத்தில் “99/66” என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் சபரி, ரோகித், ஸ்வே​தா, பவன்​கிருஷ்ணா, கே.ஆர்​.​விஜ​யா, குமாரி கனிஷ்​கா, ஸ்ரீலே​கா, சிங்​கம் புலி, பி.எல்​.தேனப்​பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அமானுஷ்யம் நிறைந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இதற்கான பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்​தின்​ இசை வெளியீட்​டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்