அதிர்ச்சி: ’அவதார் 3’-ன் முதல் நாள் வசூலை முந்திய துரந்தரின் 15வது நாள் வசூல்

அவதார் 2 இந்தியாவில் முதல் நாளில் ரூ. 40 கோடி வசூலித்தது.;

Update:2025-12-20 14:01 IST

சென்னை,

15 நாளில் திரையில் ஓடுக்கொண்டிருக்கும் ஒரு இந்தியத் திரைப்படம், ஹாலிவுட் படத்தின் முதல் நாள் வசூலை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான துரந்தர் அதன் 15வது நாளில் இந்தியாவில் அவதார்: பயர் அண்ட் ஆஷ் படத்தின் முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூலித்தது.

துரந்தர் இந்திய பாக்ஸ் ஆபீஸில் அமோக வசூல் செய்து, ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அதன் மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று, துரந்தர் சுமார் ரூ. 22 கோடி வசூல் ஈட்டியது. அதே நேரத்தில் அவதார்: பயர் அண்ட் ஆஷ் சுமார் ரூ. 20 கோடி மட்டுமே ஈட்ட முடிந்தது.

இதன் முந்தைய பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் இந்தியாவில் முதல் நாளில் ரூ. 40 கோடி வசூலித்தது. தற்போது அதன் மூன்றாம் பாகத்தின் வசூல் அதைவிட 50 சதவிகிதம் குறைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்