"பராசக்தி" படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? வெளியான தகவல்
'பராசக்தி' திரைப்படம் ஜனவரி 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;
சென்னை,
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘பராசக்தி’. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, வருகிற ஜனவரி மாதம் 4ந் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக 'பராசக்தி' இசை வெளியீட்டு விழாவினை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி திருச்சி அல்லது மதுரையில் இசை வெளியீட்டுவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.