புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா?...தற்போது பிரபல நடிகை
தமிழில் அவர் 4 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் அதிகம்.;
சென்னை,
தற்போது ஒரு நட்சத்திர கதாநாயகியின் குழந்தை பருவ புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் மலையாளத்தில் பாப்புலராக இருக்கும் நடிகை. அவர் தமிழிலும் நடித்திருக்கிறார். தமிழில் அவர் 4 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் அதிகம்.
அந்த நடிகை வேறு யாரும் இல்லை அனுபமாதான். மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் துறைகளில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த நடிகை அனுபமா.
இவர் மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன காதல் படமான ''பிரேமம்'' மூலம் அறிமுகமானார். தமிழில் ''கொடி'' படத்தின் மூலம் அறிமுகமாகமான இவர், தற்போது துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ''பைசன்'' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இது மட்டுமில்லாமல் தெலுங்கில் ''கிஷ்கிந்தாபுரி'' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது அனுபாமாவின் ''பரதா'' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.