தந்தைக்கு டாக்டர் பட்டம் - நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார்.;

Update:2025-11-29 12:16 IST

சென்னை,

தனது தந்தையும் நடிகருமான சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“கலை மற்றும் சமூகத்திற்கு என் தந்தை ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு உள்ளிட்டோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்