அபிஷன் - அனஸ்வரா நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது!
'டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார்.;
சென்னை,
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘டூரிஸ்ட் பேமிலி’.இந்த படத்தினை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இவர் தற்போது ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மதன் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தினை எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் ”சத்யா” எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக ”மோனிஷா” எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்திற்கான டப்பிங் பணியில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளநிலையில், விரைவில் டைட்டில் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.