''கூலி'' - ''நான் அவரின் மகளாக நடித்திருக்கிறேன்'' - ஸ்ருதிஹாசன்
‘கூலி’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசி இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.;
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தனது கதாபாத்திரம் குறித்து பேசி இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். அவர் கூறுகையில்,
'' நான் ''இனிமேல்'' மியூசிக் வீடியோவில் நடித்தபோது, லோகேஷ் கனகராஜ் ''கூலி'' ஸ்கிரிப்டை என்னிடம் கூறினார். இப்படத்தில் சத்யராஜ் சாரின் மகளாக நான் நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரம் வலிமையானது'' என்றார்.