’இந்த காரணத்தால் ’மிஸ் இந்தியா’ போட்டியில் பங்கேற்க மறுத்த பிரபல நடிகை...யார் தெரியுமா?

தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார்.;

Update:2025-11-08 20:04 IST

சென்னை,

இந்தப் புகைப்படத்தில் உள்ள பெண் தற்போது பிரபல நடிகை. தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி, அவரது பெற்றோர் இருவரும் நடிகர்கள். அவர்களைப் பின்பற்றி, இவரும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

ஆனால் அவர் ஒப்பந்தமான முதல் இரண்டு படங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, மனச்சோர்வடைந்த இவர் அவரது பெற்றோரின் ஆலோசனையால் மீண்டும் கதாநாயகியாக முயற்சிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியாக படங்களில் நடித்தார். தமிழிலும் தெலுங்கிலும் தனது நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

இருப்பினும், டாக்டராக வேண்டும் என்பதுதான் இவரது முதல் இலக்காக இருந்தது. அதனால் மிஸ் இந்தியா போட்டிகளில் கூட பங்கேற்க மறுத்துவிட்டார். இந்த நடிகை யார் தெரியுமா? அவர் வேறு யாருமல்ல, ஷிவானி ராஜசேகர்தான்.

2022-ம் ஆண்டில் ஷிவானி ராஜசேகருக்கு ஒரு பம்பர் ஆபர் கிடைத்தது. பெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க அவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. தான் அதில் பங்கேற்பதாக ஷிவானி மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, திடீரென பெமினா மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பெமினா மிஸ் இந்தியா போட்டி நாளில், தனக்கு மருத்துவ தேர்வு இருந்ததால், போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து ஷிவானி சமூக ஊடகங்களில் பதிவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்