பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத் காலமானார்
டான் மெக்ராத்தின் மறைவு, கார்ட்டூன் உலகிற்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.;
வாஷிங்டன்,
'தி சிம்ப்சன்ஸ்' கார்ட்டூனின் எழுத்தாளர் டான் மெக்ராத் (61) காலமானார்.
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத். இவர் சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ஆம் தேதி காலமானார்.
இதனை அவரது சகோதரி கெயில் மெக்ராத் தெரிவித்துள்ளார். டான் மெக்ராத்தின் மறைவு, கார்ட்டூன் உலகிற்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.
1997-ம் ஆண்டு 'தி சிம்ப்சன்ஸ்' தொடரின் 'ஹோமர்'ஸ் போபியா' எபிசோடுக்காக இவருக்கு மதிப்புமிக்க எம்மி விருது கிடைத்தது.