பிரபல பாடகி ஜானகியின் மகன் காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானார்.;

Update:2026-01-22 14:26 IST

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 45,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடகி ஜானகி- ராம் பிரசாத் தம்பதிக்கு முரளி கிருஷ்ணா ஒரே மகன் ஆவார். முரளிக்கு சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் உமாவுடன் திருமணம் நடைபெற்றது. பிரச்னைகள் காரணமாக இந்த தம்பதியிடையே விவாகரத்து ஆகி விட்டது. முரளி கிருஷ்ணா தெலுங்கு சினிமா படங்களில் நடித்துள்ளார். முரளி தன் அம்மாவுடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக முரளி காலமானார். ஜானகிக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்