வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்...கையசைத்து நன்றி தெரிவித்த சூர்யா - வீடியோ வைரல்

சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன்பு திரண்டனர்.;

Update:2025-07-23 12:26 IST

சென்னை,

நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். ரசிகர்களுக்கு சூர்யா கைசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்தடுத்து தோல்வி படங்களில் கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப ஆயத்தமாகி வரும் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ''கருப்பு'' படத்தில் நடித்து வருகிறார். திரிஷா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

இப்படத்தைத்தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்