ஸ்ரீலீலாவுக்கு பிடித்த ''டான்சர்'' யார் தெரியுமா?
ஜகபதி பாபு, ஸ்ரீலீலாவிடம் தெலுங்கு சினிமாவில் பிடித்த டான்சர் யார்? என்று கேட்டார்.;
சென்னை,
''ஜெயம்மு நிச்சயமு ரா'' என்பது ஜீ5-ல் ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீலீலா விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். இதன் முதல் எபிசோட் தற்போது வைரலாகியுள்ளது.
ஜகபதி பாபு, ஸ்ரீலீலாவிடம் தெலுங்கு சினிமாவில் பிடித்த டான்சர் யார் என்று கேட்டார். அதற்கு ஸ்ரீலீலா, இப்போது சாய் பல்லவி என்றும், முன்பு ராதா என்றும் கூறினார். அவரின் இந்த பதில் பலரின் இதயங்களை வென்றுள்ளது.
ஸ்ரீலீலா நடிப்பில் அடுத்து திரைக்கு வரவுள்ள படம் ''மாஸ் ஜாதரா''. ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் நாளை திரைக்கு வர இருந்தநிலையில், தள்ளிபோனது. பவன் கல்யாணுடன் ''உஸ்தாத் பகத் சிங்'' படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் ''பராசக்தி''யிலும், பாலிவுட்டில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.